ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் இன்று வெளியீடு...!

ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் இன்று வெளியீடு...!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது. 

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளைப் பெற பக்தர்கள் இன்று முதல் 29ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும் சுப்ர பாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த டிக்கெட்டுகளும் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

Find Us Hereஇங்கே தேடவும்