திருமாவின் தாயாரின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்!

திருமாவின் தாயாரின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்!
திருமாவின் தாயாரின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்!

திருமாவின் தாயாரின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்!

திருமா தனது தாயாரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இதை தொடர்ந்து முதல்வர் அவரை போனில் தொடர்புக்கொண்டு தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல் திருமாவளவன் அவர்களின் தாயாரின் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும் அவர் இப்போது திருச்சியில் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகும் திருமாவளவன் அவர்கள் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து விவரம் அறிந்த உடனே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருமாவளவன் அவர்களை போனில் தொடர்புக் கொண்டு பேசினார்.

இதுபற்றி செய்தியொன்றை  வெளியிட்டுள்ளது செய்து மக்கள் தொடர்புத்துறை :

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.06.2022) காலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவரது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்து, விரைவில் அவர் முழுமையாக குணம் பெற்று வீடு திரும்ப தனது விருப்பத்தை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com