மதுரையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த பிரபல பன் பரோட்டா உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மதுரையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த பிரபல பன் பரோட்டா உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில் பெட்டிக்கடைக்கான அனுமதி பெற்று சாலையை ஆக்கிரமித்து உணவகத்தை நடத்தி வந்ததாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி சார்பிலும் நோட்டிஸ் அளிக்கப்பட்ட நிலையிலும் விதிகளை மீறி செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகாரின் பேரில் அந்த கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள் சுகாதாரமற்ற முறையில் உணவு விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தினர். இதனையெடுத்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் தடையை மீறி உணவகத்தில் விற்பனை மேற்கொள்ளக்கூடாது என எச்சரித்தனர்.
பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரபல பன் பரோட்டா கடையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் உண்டுவந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அளித்த நோட்டிஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.