தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகம் முழுவதிலும் இருந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவக் கல்லூரி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.