சென்னையில் 57வயது பெண் வங்கி மேலாளர் மரம் விழுந்து பலி! போலீசார் விசாரணை
சென்னையில் 57வயது பெண் வங்கி மேலாளர் மரம் விழுந்து பலி! போலீசார் விசாரணை
கடந்த வெள்ளிக்கிழமை (24.06.2022) மாலை 5மணி அளவில், கே.கே. நகர் பகுதியில் மரம் ஒன்று காரின் மீது விழுந்தது. இதில் 57 வயதான இந்தியன் வங்கி மேலாளர் வாணி கபிலன் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் இதில் இவருடைய தங்கை எஸ்.இளவரசி(52) மற்றும் டிரைவர் கார்த்திக் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவமானது லக்ஷ்மன சாமி சாலை மற்றும் பி.டி.ராஜன் சாலை சந்திக்கும் இடமான கர்நாடக வங்கி கிளைக்கு அருகில் சரியாக மாலை 5மணி அளவில் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் மீது விழுந்த மரமானது சுமார் 50 வருடங்கள் பழமையானது எனவும் , மேலும் மழை நீர் செல்லும் பாதள சாக்கடைக்கான பள்ளங்கள் தோண்டபட்டிருக்கும் இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில் தான் இருந்தது எனவும் மாநகராட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
போரூரின் மங்களம் நகரைச் சேர்ந்த வாணி , மற்றும் தி-நகருக்கு சென்றிருந்த தங்கை எழிலரசி இருவரும் வாணியின் காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வாணிக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த எழிலரசி மரம் விழுவதற்கு சில வினாடிகளுக்கு முன்னதாக தலையைக் குனிந்ததால் இடுப்பில் அடியுடன் தப்பினார். அதே சமயம் டிரைவர் கார்த்திக் காரின் கதவைத் திறந்து வெளியே குதித்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் கூறியதாவது, சம்பவத்தின் போது காரை 15கிமீ வேகத்தில் பொறுமையாகவே ஓட்டிவந்த டிரைவர் கார்த்திக் மரம் விழுவதைக் கவனிக்க தவறிவிட்டார். மேலும் ’அவர் நினைத்திருந்தால் காரை நிறுத்தியிருக்கலாம் அல்லது வேகமாக தாண்டி போயிருக்கலாம்’ என போலீசார் தெரிவித்த்ருகின்றனர்.
கே.கே.நகர் ஆய்வாளர் ஜி.பிரபு தலைமையிலான குழு வாணியை ஓமாந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாணியின் மகள் கன்னல்மொழி கபிலன் ஒரு பத்ரிக்கையாளர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
காண்ட்ராக்டரின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்திருக்கிறது என மாநகராட்சி தரப்பின் அறிக்கையில் தெரிய வருகிறது. மேலும் அறிக்கையில் ஜூன் 15 முன் வரை அங்கு எந்த விதமான குழிகள் தோண்டப்படவில்லை எனத் தெரிகிறது. நிர்வாகி கூறியதாவது, “ தோண்டப்பட்டக் குழிகள் எதும் மண்ணை இலகுவாக்கி மரம் விழுவதற்கு காரணமாக அமைந்ததா என அறிக்கை கேட்டிருக்கிறோம்”.
மேலும் இந்த வார்டில் கட்டிடப் பொறியாளர் மற்றும் மின் பொறியாளர் இருவருமே இல்லை இங்கு நடக்கும் பணிகளை கவனிப்பதற்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன.