கோயிலில் பணத்தை திருடிய திருடர் மன்னிப்பு கடிதத்துடன் அதனை திருப்பி கொடுத்த சம்பவம் ராணிப்பேட்டையில் அரங்கேறியுள்ளது.
கோயிலில் பணத்தை திருடிய திருடர் மன்னிப்பு கடிதத்துடன் அதனை திருப்பி கொடுத்த சம்பவம் ராணிப்பேட்டையில் அரங்கேறியுள்ளது.
ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாப்பேட்டை சிவன் கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் காணாமல் போனதாக சிவன் கோவில் நிர்வாகிகள் உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சிப்காட் காவல் நிலைய விசாரணைக்காக கோயில் சில நாட்கள் மூடப்பட்டது. பின்னர், பல நாட்கள் விசாரணை நடத்தியும் கொள்ளையன் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும், ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையனை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று பௌர்ணமி பூஜைக்கு பிறகு கோயில் அதிகாரிகள் உண்டியலை திறந்த போது அதில் ஒரு நோட்டுடன் சேர்த்து ரூ.500 மதிப்புள்ள இருபது நோட்டுகள் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதனை பார்த்த போது பணம் திருடியதாகக் கூறி ஒருவர் மன்னிப்புக் கேட்டு கடிதம் ஒன்றை உண்டியலில் போட்டுள்ளார். அந்த கடிதத்தில் “கோயிலில் உள்ள பணத்தைத் திருடிய பிறகு தான் நிம்மதி இழந்ததாகவும், வீட்டில் எண்ணற்ற பிரச்னைகளைச் சந்தித்ததாகவும் அதனால் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிப்காட் காவல்நிலையத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் "இது வருத்தமோ குற்ற உணர்ச்சியோ அல்ல. காவல்துறையின் விசாரணைக்கு பயந்து கடிதம் அனுப்பியுள்ளார். நாங்கள் நிச்சயமாக அவரைப் பிடிப்போம் என்று அவருக்குத் தெரியும் என்றார். மேலும், திருடுபவர் சுற்றுப்புறம் மற்றும் கோயிலைப் பற்றி நன்கு அறிந்த நபராக இருக்கலாம் என்றும் அதனால் சட்டத்தை கண்டு அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார்.