13,300 ஆசிரியர் பணியிடங்கள் காலி - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியீடு

13,300 ஆசிரியர் பணியிடங்கள் காலி - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியீடு

தமிழக அரசு பள்ளியில் காலியாக உள்ள 13,300 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபாய் தொகுப்பூதியமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாயும், முதுகலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆசிரியர் தேர்வை நடத்த வேண்டுமென அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்