தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்...!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்...!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடத்தக்கது

மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளிலும், கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்