அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை - வைத்திலிங்கம்

அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை - வைத்திலிங்கம்

அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.  

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதையடுத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "புதிதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து வெளிநடப்பு செய்தோம். அதிமுகவின் நடைமுறைகளை மாற்றியுள்ளனர்; அவைத் தலைவரை நியமித்த தீர்மானம் செல்லாது.

இன்று பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம்" எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளோம். அதிமுக பொதுக்குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்