கைக் குலுக்கிய அதிமுக தொண்டர்கள் - திருமாவளவன் நெகிழ்ச்சி

அதிமுகவினர் என்னைச் சூழ்ந்து கொண்டு கைக்குலுக்கியது நெகிழ்ச்சி அளித்தது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் அவ்வழியாக சென்றபோது தனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அதிகாலை புறப்பட்டு சென்றேன்.
வானகரம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அதிமுக பொதுக்குழுவுக்கு வந்திருந்த அக்கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை