மதுபோதையில் மரக்குச்சியை வைத்து விரட்டிய நபரை தாக்க முயன்ற காட்டு யானை...!

மதுபோதையில் மரக்குச்சியை வைத்து விரட்டிய நபரை தாக்க முயன்ற காட்டு யானை...!

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை மரக் குச்சியை வைத்து விரட்டிய நபரை ஆக்ரோஷத்துடன் யானை தாக்க முயன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிங்கோனா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை காட்டு யானை சுற்றித் திரிந்தது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த அகஸ்டின் என்பவர் மதுபோதையில் மரக் குச்சியை வைத்து யானையை விரட்ட முயன்றார்.

ஆத்திரம் அடைந்த யானை திடீரென அந்த நபரை தாக்க முயன்றது. இந்த சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

Find Us Hereஇங்கே தேடவும்