குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு- பட்டுக்கோட்டை பிரபாகர் இரங்கல்

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு- பட்டுக்கோட்டை பிரபாகர் இரங்கல்

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ட்விட்டர் பக்கத்தில் "காலையில் மொபைலை ஆன் செய்து இணையம் போனதும் சரசரவென்று செய்திகளும், தவறிய அழைப்புகளும்!

ப்ரியா கல்யாணராமன் திடீர் மறைவுச் செய்தியை முதலில் நம்பவில்லை. சில நண்பர்களை அழைத்து செய்தி உறுதி என்று அறிந்த பிறகும் மனம் நம்ப மறுக்கிறது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறேன்" என அவர் குறிப்பிட்டார்

மேலும், "ஆன்மா சாந்தியடையட்டும் என்று சுலப வார்த்தைகளில் கடந்துவிட முடியாது. குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முதலில் எனக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. இந்த இழப்பின் அதிர்வுகள் சற்றே அடங்கியதும் விரிவாக எழுதுகிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்

Find Us Hereஇங்கே தேடவும்