குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு- கே.எஸ்.அழகிரி இரங்கல்

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு- கே.எஸ்.அழகிரி இரங்கல்

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு குறித்து கே.எஸ்.அழகிரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் "மூத்த பத்திரிகையாளரும், குமுதம் இதழின் ஆசிரியருமான திரு.ப்ரியா கல்யாணராமன் அவர்கள் இன்று சென்னையில் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பாரம்பரிய பெருமைமிக்க குமுதம் வார இதழில் நீண்டகாலமாக ஆசிரியராகப் பணியாற்றி பெருமை சேர்ந்தவர். தமது இளமை பருவம் முதல் பத்திரிகையாளராக பணியாற்றி அளப்பரிய சாதனைகளை புரிந்தவர்" என குறிப்பிட்டார்.

மேலும் அவர், "திரு.ப்ரியா கல்யாணராமன் அவர்களது மறைவு பத்திரிகை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து  வாடும் குமுதம் பத்திரிகை நிறுவனத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்