குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு- செய்தித்துறை அமைச்சர் திரு.மு. பெ.சாமிநாதன் இரங்கல்

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு- செய்தித்துறை அமைச்சர் திரு.மு. பெ.சாமிநாதன் இரங்கல்
குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு குறித்து செய்தித்துறை அமைச்சர் திரு.மு. பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்

இது குறித்து  திரு.மு. பெ சாமிநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் "குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளில் இருந்தவரும் "குமுதம்" வார இதழின் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவருமான ப்ரியா கல்யாணராமன் என்கிற திரு. க.ராமச்சந்திரன் (வயது 55) அவர்கள் இன்று (22.06.2022) திடீர் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அன்னாரது மறைவு பத்திரிகைத் துறைக்கு பேரிழப்பாகும்”. என குறிப்பிட்டார்

மேலும், "அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறையை சார்ந்த நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்


Find Us Hereஇங்கே தேடவும்