குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு - டி.டி.வி.தினகரன் இரங்கல்

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு - டி.டி.வி.தினகரன் இரங்கல்

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு குறித்து டி.டி.வி.தினகரன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் ( 55 ) மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குமுதம் இதழில் பணியாற்றி வந்தார். மேலும் ஆன்மீகம் தொடர்பாக அதிக கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இந்நிலையில் இவரது மறைவு குறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "குமுதம் வார இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திரு.பிரியா கல்யாணராமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். 

பத்திரிகைத் துறையில் புதுமைகளைப் புகுத்திய ஆசிரியராகவும், ஆன்மிகம், வாழ்வியல் உள்ளிட்டவற்றில் ஏராளமான புத்தகங்களை எழுதியவராகவும் திகழ்ந்த திரு.பிரியா கல்யாணராமனின் மறைவு தமிழ் பத்திரிகை உலகிற்கு இழப்பாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஊடக துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்