தூத்துக்குடியில் மதுபோதையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் மதுபோதையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகத்தாய். இவருக்கு செல்லத்துரை(26), முத்துச்செல்வம்(19) ஆகிய இரு மகன்கள். இருவரும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் செல்லத்துரை மதுவுக்கு அடிமையானவர். நேற்று இரவு செல்லத்துரை தனது தாயிடம் மதுபோதையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதை பார்த்த தம்பி முத்துச்செல்வம் தடுக்க முயன்றுள்ளார். தகராறு முற்றவே தம்பி முத்துச்செல்வம் அண்ணன் செல்லத்துரை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் செல்லத்துரையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.