தமிழ்நாடு
வகுப்பறைக்கு வர்ணம் பூசி பிரியாவிடை பெற்ற மாணவர்கள்...!
வகுப்பறைக்கு வர்ணம் பூசி பிரியாவிடை பெற்ற மாணவர்கள்...!
12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி முடித்த நிலையில் வகுப்பறைக்கு வர்ணம் பூசி பிரியாவிடை பெற்றனர்.
12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி முடித்த நிலையில் வகுப்பறைக்கு வர்ணம் பூசி பிரியாவிடை பெற்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கடிநெயல்வயல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதி முடித்த 12ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 60 மாணவர்கள் ஒன்றிணைந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் சேர்த்து அதன் மூலம் பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வர்ணம் பூசி வகுப்பறையை மேலும் அழகுபடுத்தினர்.
இதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளையும் வழங்கி பிரியாவிடை பெற்றனர்.