சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 முதல் 5ம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 முதல் 5ம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த மலர் கண்காட்சியை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தோட்டக் கலைத் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் முதன்முறையாக மலர்க் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சிக்காக 200க்கும் அதிகமான வண்ண மலர்கள் அரங்குக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த மலர் கண்காட்சியைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ. 50 , மாணவர்களுக்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் கலைவாணர் அரங்கில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்க் கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் எனத் தோட்டக் கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.