தமிழ்நாடு
44 லட்சத்துக்கும் அதிகமான யூடியூப் சேனல்கள், 11 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்...!
44 லட்சத்துக்கும் அதிகமான யூடியூப் சேனல்கள், 11 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்...!
உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமான யூடியூப் சேனல்களை நீக்கி உள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமான யூடியூப் சேனல்களை நீக்கி உள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் சமூக வழிகாட்டுதல்கள் அமலாக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும், ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவிலும் 11 லட்சம் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.