தமிழ்நாடு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவறவிட்ட ஒன்றரை வயது குழந்தை 30 நிமிடத்தில் மீட்பு...!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவறவிட்ட ஒன்றரை வயது குழந்தை 30 நிமிடத்தில் மீட்பு...!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோர் தவறவிட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை அரை மணி நேரத்தில் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோர் தவறவிட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை அரை மணி நேரத்தில் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வினோத் குமார் - லதா தம்பதி தங்களது குழந்தை ருத்விக் உடன் விசாகப்பட்டினம் செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.
திடீரென குழந்தை காணாமல் போனதால் பெற்றோர் ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவியை அணுகினர்.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது குழந்தை நடைமேடைக்கு அருகில் நடந்து சென்றது தெரியவந்தது. பின்னர் ரயில்வே போலீசார் 30 நிமிடத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.