சிந்தாதிரிப்பேட்டையில் வெட்டி கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பாலசந்தர் பற்றி சென்னை பெருநகர காவல்துறை புதிய தகவல்கள் வெளியிட்டுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டையில் வெட்டி கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பாலசந்தர் பற்றி சென்னை பெருநகர காவல்துறை புதிய தகவல்கள் வெளியிட்டுள்ளது.
பாஜக பிரமுகர் பாலசந்தர் என்பவர் பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தவர். இவரைச் சென்னையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.
இது குறித்து காவல்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், "கொலையான பாலச்சந்தர், இரண்டு கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகளில் கைதாகி ஜாமீனிலிருந்தார்.
தொழில்போட்டி காரணமாக அதே சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 10க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி பிரதீப் மற்றும் அவனது கூட்டாளிகளால் பாலச்சந்தர் வெட்டப்பட்டதாக தெரியவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.