சென்னையில் பாஜக பிரமுகரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.
சென்னையில் பாஜக பிரமுகரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாலசந்தர் என்பவர் பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்துள்ளார். இவருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்புக்காக காவலர் ஒருவரை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பாலசந்தர் தனது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்று பேசிக் கொண்டிருந்துள்ளார்.
பின்னர் பி.எஸ். பாலகிருஷ்ணன் அருகிலிருந்த தேநீர்க்கடைக்குச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. இதனால் பாலச்சந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பேசிய அவர், "பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.