நீர்வரத்து அதிகரிப்பால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

நீர்வரத்து அதிகரிப்பால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்பிடிப்பு  பகுதிகளில் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை நிலவரப்படி 226 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

அதே நேரத்தில் அருவியை தொலைவில் இருந்து பார்வையிட மட்டும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்