வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம்...!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம்...!

தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூரில் இருந்து குடியாத்தம் செல்லும் வழியில் பாலாற்றின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

ஆம்பூரிலிருந்து குடியாத்தத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு வெள்ளத்தால் இரண்டாக உடைந்தது.

இதையடுத்து தற்காலிகமாக மண்ணைக் கொட்டி நிரப்பி தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைப்பெற்று வந்தது.

இந்நிலையில் தொடர் கனமழையால் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அரிப்பு ஏற்பட்டு தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

Find Us Hereஇங்கே தேடவும்