அழுகிய நிலையில் 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்!

அழுகிய நிலையில் 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்!

அழுகிய நிலையில் 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்!

மதுரை மாட்டுத்தாவணி பழ சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தியதில் அழுகிய நிலையில் விற்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், அனைத்து பழ கடைகளில் மாம்பழம் குவியத் தொடங்கியுள்ளது. 

சேலத்து மாம்பழம், மல்கோவா மாம்பழம், பங்கணபள்ளி, இமாம் பசந்த் என பல இராகங்களில் மாம்பழங்கள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்ட  பழ சந்தைகளில் எத்தனால் (Ethanol)கெமிக்கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை  அதிகாரி  ஜெயராம் பாண்டியன் தலைமையில், மதுரை மாட்டுத்தாவணி பழ சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

மொத்தம் 30 கடைகளுக்கு மேல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதன் நிலையில், 10 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோ அழுகிய மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மேலும், இதுபோன்ற பழங்களை விற்பனை செய்யக்கூடாது என கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Find Us Hereஇங்கே தேடவும்