ஊட்டியில் இன்று 17ஆவது ரோஜா கண்காட்சி துவக்கம்!

ஊட்டியில் இன்று 17ஆவது ரோஜா கண்காட்சி துவக்கம்!

ஊட்டி ரோஜா பூங்காவில் இன்று 17வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கி இரு நாட்கள் நடக்கிறது.

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா காட்சியும் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

இதனைக் காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த வாரம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி முடிந்த நிலையில் நேற்று கூடலூரில் வாசனை திரவிய பொருட்களின் கண்காட்சி முடிந்த நிலையில் நேற்று கூடலூரில் வாசனைத் திரவிய பொருட்களின் கண்காட்சி துவங்கியது. இது மூன்று நாட்கள் நடக்கிறது.

இன்று ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி துவங்குகிறது. இன்று துவங்கி இரு நாட்கள் நடக்கும் இந்த ரோஜா காட்சியில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Find Us Hereஇங்கே தேடவும்