கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவி...!

கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவி...!

குடும்பத் தகராறில் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கீழநட்டார்குளம், சூசையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி ராஜா (28). இவரது மனைவி வசந்தி (25). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் நேற்று கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், வசந்தி கணவர் திருப்பதி ராஜா மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) அன்னராஜ், கொலை முயற்சி வழக்குப் பதிந்து வசந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Find Us Hereஇங்கே தேடவும்