குமரி அனந்தனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது அறிவிப்பு

குமரி அனந்தனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது அறிவிப்பு..!

2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்குவது குறித்து  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இதன்படி, பெங்களூரில் வசிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கு 2022-ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு முதன்மையானவர்களில் ஒருவர் ஆவார். 

அதே நேரத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவர் பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார். விருது பெறும் இரண்டு நபர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்