கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - மக்கள் நல்வாழ்வுத் துறை

கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - மக்கள் நல்வாழ்வுத் துறை

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்