கிருஷ்ணகிரி: 17 வயது சிறுமி பலாத்காரம் - அண்ணன் உள்பட 4 பேர் சிக்கியது எப்படி?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இதனால் அவரது தந்தை மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

தாயின் மறைவுக்கு பிறகு சிறுமிக்கு பாதுகாப்பாக பெரியவர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கிராம மக்கள் சந்தேகம் அடைந்து சிறுமியை அழைத்து விசாரித்தபோது 4 பேர் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்ததாகவும், அதனால் 4 மாத கர்ப்பம் ஆனதாகவும் கூறியுள்ளார்.

இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனே ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழகுப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுமியின் உடன்பிறந்த அண்ணன், பெரியப்பா மகன் மற்றும் உறவினர்கள் சந்திரசேகரன் (42), தமிழ்வண்ணன் (29) ஆகிய 4 பேர் சீரழித்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதன் பிறகு அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக சிறுமியை மீட்டு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com