கொடைக்கானல்:சிலிண்டர் கசிவால் தீ விபத்து- கைக்குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்

மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர்
கேஸ் கசிந்து விபத்து ஏற்பட்ட வீடு
கேஸ் கசிந்து விபத்து ஏற்பட்ட வீடு

கொடைக்கானல் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கைக்குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆனந்தகிரி 1வது தெரு பகுதியில் சுபாஷ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது மனைவி அனிதா, மகன் கபிலன் (1), மாமியார் புவனேஸ்வரி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். தொடர்ந்து நேற்று இரவு அவர்களது வீட்டில் கேஸ் அடுப்பில் கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனை கவனிக்காத சுபாஷன் மாமியார் புவனேஸ்வரி கேஸ் சிலிண்டரை இன்று காலை பற்ற வைத்து உள்ளார்.உடனே கசிந்து இருந்த கேஸ் வாயுவால் எதிர் பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதியில் இருந்த மக்கள் தீ காயம் அடைந்த ஒரு வயது குழந்தை உட்பட நான்கு பேரை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சுபாஷ் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர். திடீரென கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com