கள்ளக்காதல் ஜோடியின் அந்தரங்க வீடியோ - கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

சைபர் க்ரைம் போலீசார் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 பேர்
கைது செய்யப்பட்ட 4 பேர்

நித்திரவிளை அருகே கள்ளக்காதல் ஜோடி தனிமையில் இருக்கும் அந்தரங்க காட்சிகளை ரகசிய காமிரா மூலம் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், நித்திரவிளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.இதனை அந்த பகுதியை சேர்ந்த ஒருசில வாலிபர்கள் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தும் கள்ளக்காதல் ஜோடி அதனை பொருட்படுத்தாமல் தங்களது உறவை தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பெண்ணின் வீட்டின் படுக்கையறைக்குள் புகுந்து ரகசியமாக காமிரா ஒன்றை வைத்துள்ளனர்.இந்த கேமராவில் கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் தனிமையில் இருக்கும் அந்தரங்க காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த வீடியோக்களை வைத்து வாலிபர்கள் தங்களுடனும் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு அந்த பெண் சம்மதிக்க மறுக்கவே ஆத்திரமடைந்த வாலிபர்கள் அந்த பெண் தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது கணவரை ஊருக்கு வரவைத்து அவருடன் தான் தனிமையில் இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் சைபர் க்ரைம் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீசார் நித்திரவிளை போலீசார் உதவியுடன் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கிய கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (37), சுமேஷ் (20), நாகேஷ் (20), பிபின் (20) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர் மேலும் இதில் தொடர்புடைய இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com