பத்திரப்பதிவு முறைகேடு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

பத்திரப்பதிவு துறையில் முறைகேடு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு..!
பத்திரப்பதிவு முறைகேடு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

பத்திரப்பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு

பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பத்திரப்பதிவு துறையில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்களுடன் 3 ஆண்டுகளுக்கு இந்த சிறப்பு புலனாய்வு குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு, நில மோசடி, வருவாய் இழப்பு, அரசு நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து இக்குழு ஆய்வு செய்யும்.  ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஆய்வறிக்கையை அரசுக்கு அளிக்கும். வருங்காலங்களில் மோசடிகளை தவிர்க்க வழிமுறைகளையும் ஆய்வு செய்து இக்குழு அரசுக்கு அளிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com