நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. அவ்வாறு நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் நடந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வ எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரியும் என்பதால் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.