தமிழ்நாடு
அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது - அண்ணாமலை
அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது - அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக திடீரென விலகியது. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமியும் நேற்று உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஒரே படகில் பாஜக, அதிமுக செல்கிறது. இரண்டு கட்சிக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. பாஜக, அதிமுக கூட்டணி தொடர்கிறது. இனி வரும் நாட்களில் தமிழக விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.