வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் முடிவு வாபஸ்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் முடிவு வாபஸ் பெறப்பட்டது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைக்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. தேசிய வன உயிர் வாரியத்திடம் அதிமுக ஆட்சியில் தமிழக அரசு சமர்ப்பித்த விண்ணப்பம் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரணாலயத்தின் சுற்றளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைக்கும் முடிவு வாபஸ் பெறப்பட்டது.
5,467 ஹெக்டேர் நிலப்பகுதியில் கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களுக்குத் திறந்து விடப்படும் அபாயம் ஏற்பட்டது. சரணாலயத்தின் 2 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து விலக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்கள் சிறிய அளவிலான தொழில் செய்வதற்கும் வீடுகளுக்காகவும் கட்டுமானங்கள் எழுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் முடிவை தமிழக அரசு வாபஸ் பெற்றது.