தமிழ்நாடு
விழுப்புரத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது
விழுப்புரத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது
விழுப்புரத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள 9 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்த நிலையில் நொச்சலூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை, 'வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன்' எனவும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து அறிந்த அந்த சிறுமியின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.