“மத்திய அரசே… இத்திட்டத்தை கைவிடு”: திருமாவளவன் வலியுறுத்தல்!

“மத்திய அரசே… இத்திட்டத்தை கைவிடு”: திருமாவளவன் வலியுறுத்தல்!
“மத்திய அரசே… இத்திட்டத்தை கைவிடு”:  திருமாவளவன் வலியுறுத்தல்!

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் (டிச.16,17) தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தற்போது நடைபெறும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கி சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்த  போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நாடு தழுவிய பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 2 நாட்களுக்கு ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு வழங்குகிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும்,பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடெங்கும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 9 லட்சம் பேர் திச-16 & 17 ஆகிய இரு நாட்கள் மேற்கொண்டிருக்கும் ஞாயமான வேலை நிறுத்தப் போராட்டத்தை விசிக சார்பில் ஆதரிக்கிறோம். பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்துகிறோம்”, என பதிவிட்டுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com