சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்:பீதியில் மக்கள்!!

சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்:பீதியில் மக்கள்!!
சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்:பீதியில் மக்கள்!!

சென்னையில் நள்ளிரவில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சென்னையில் நள்ளிரவில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவானதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து,அதே நாளில் புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால்,புதுச்சேரியிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடற்கரையில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து,  இந்தியாவில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என இந்திய சுனாமி மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென 10-15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது.சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com