முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.
முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் காலமான நிலையில் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைத்தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.
முப்படைகளின் தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக நரவானே செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.