15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தெப்பக்குளத்திற்கு வரும் நீர்வழி பாதைகளையும் ஆக்கிரமிப்புகளையும் அகற்றியதால் மழைநீர் நிரம்பியுள்ளது.
இதையடுத்து கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்னர் தெப்பத் திருவிழா நடத்த தனி குழுக்கள் அமைத்து கோயில் உதவி ஆணையர், செயல் அலுவலர் மற்றும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் தலைமையில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மேலும் 15 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத் திருவிழா நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.