பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் 2021-22அம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்பொது நடப்பு நிதி ஆண்டில் இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
வங்கி திருத்தம் சட்ட மசோதா அதற்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால் இந்த மசோதாவை ரத்து செய்யவும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தும் வங்கி ஊழியர்கள் இன்றும் (டி.ச. 16) நாளையும் (டி.ச. 17) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து பொதுதுறை வங்கியான எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் நலன் கருதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் 2 நாட்கள் நடைபெறும் இந்த போராட்டத்தால் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.