தமிழ்நாட்டில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில் ‘இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் ஏ.டி.ஜி.பி-யாக இருந்த ராஜீவ்குமார் டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெறுகிறார்.
அதேப் போல் ஆவடி கமிஷனராக இருந்த ஏ.டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் சென்னை காவலர் பயிற்சி பள்ளி டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெறுகிறார். மேலும் ஊழல் தடுப்பு இயக்குநராக இருந்து வந்த ஏ.டி.ஜி.பி அபே குமார் சிங், அதேப் பிரிவின் டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெறுகிறார்.
அத்துடன் TANGEDCO ஏ.டி.ஜி.பி வன்னிய பெருமாள், அதேப் பிரிவில் டி.ஜி.பி-யாக பதவி உயர்வு செய்யப்படுகிறார். சிவில் சப்ளைஸ் ஏ.டி.ஜி.பி அருண், ஆவடி கமிஷனராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
சென்னை துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான் திருப்பத்தூர் எஸ்.பி-யாக மாற்றம் செய்யப்படுகிறார். மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பி-யாக இருந்த ஸ்ரேயா குப்தா சென்னை துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
அதேப்போல் சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஹர்ஸ் சிங் நாகப்பட்டினம் எஸ்.பி-யாக மாற்றம் செய்யப்படுகிறார். விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக சஷாங்க் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக சாய் பிரநீத் நியமனம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், திருப்பூர் எஸ்.பி-யாக சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்’ என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.