மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன் தள்ளுபடி!

மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன் தள்ளுபடி!

மகளிர்

சுய உதவிக் குழுவினர் கடன் தள்ளுபடி!

 

மகளிர் சுய உதவிக் குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற

2,576 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு

வழங்கப்பட்டுள்ள கடன் தொகையில், நிலுவையில் இருக்கும் 2,756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி

செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021 – 2022 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்

இது குறித்து முன் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

 

தற்போது அதனை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தில் மத்தியக் கூட்டுறவு

வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள்,

நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை – நபார்டு உள்ளிட்டவை மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு

வழங்கப்பட்ட கடன்களின் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும்

நிலுவைத் தொகையான 2,756 கோடியை அரசே ஏற்றுக் கொண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

 

ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இல்லாமல் பிற மாநிலங்களின்

முகவரி  இருப்பின் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது. 

Find Us Hereஇங்கே தேடவும்