முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்

முன்னாள் தமிழக ஆளுநரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா வயது மூப்பின் காரணமாக தனது 88ஆவது வயதில் காலமானார்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா 4 ஜூலை, 1933 ம் ஆண்டு பிறந்தார்.  இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியான இவர் பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார். மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றிய இவரது பங்கு பெரிதும் பாராட்டப்பட்டது.  காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக இருந்தவர். 

இவர் ஆந்திராவில் 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், 5 முறை எம்.எல்.சி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் இவர் ஆந்திர மாநில முதலமைச்சராக 2009ஆம் ஆண்டு முதல் 2010 வரை பதவி வகித்துள்ளார்.  

இதனை தொடர்ந்து 2011 முதல் 2016 தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். பின்னர் ரோசய்யா ஐதராபாத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (டி.ச. 04) காலை காலமானார் .

இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்