இளம் வயதினர் குறித்து தலைமை செயலாளர் கருத்து..!

இளம் வயதினர் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு கருத்து..!

இன்றைய இளம் வயதினர் குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது..

* இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது. 

ஆனால்  பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.!!!

* கைப்பேசி அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் (Delete)  செய்யத் தெரிகிறது. 

ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது!!!.

* ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும் வித்தை தெரிகிறது. 

எதிரே அமர்ந்திருக்கும் பயணியைப் பார்த்து புன்னகைக்கத்தான் தெரிவதில்லை!!!.

* வாட்ஸ்அப் குரூப்பில் அன்பு சொட்டச்சொட்ட நண்பர்களிடம் தகவல் பரிமாற முடிகிறது.

சொந்தப் பெற்றோரிடம் தூக்கியடிப்பது போல பேசத்தான் முடிகிறது!!!.

* எந்த இடத்திலும் ஒரு நிமிடம் தாமதமானால் கோபம் கொப்பளித்துக் கொள்கிறது.

ஆனால், அவர்களுக்காகக் காத்திருக்கும் பெற்றோரின் வலி புரிவதில்லை.!!!

* எதைப் பெற்றாலும் உரிமையென எண்ணும் அவர்களுக்கு கடமைகளும் இருக்கின்றன என்பது ஒருபோதும் உரைப்பதில்லை.!!!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்