தூத்துக்குடியில் ஒரே நாளில் 25 செ.மீ மழை..!

தூத்துக்குடியில் ஒரே நாளில் 25 செ.மீ மழை..!

தூத்துக்குடியில் ஒரே நாளில் 25 செ.மீ மழை பெய்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மிக கனமழை பெய்யும் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தூத்துக்குடியில் ஒரே நாளில 25 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 10,000க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்