வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு

ஓ.பி.எஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு..!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ரூ.82.32 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015 - 16ஆம் ஆண்டு ரூ.20 லட்சம், 2017 - 18ஆம் ஆண்டு ரூ.82.12 கோடி வரியாக செலுத்துமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ரூ.82.32 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்