ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் குறைப்பு

ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் குறைப்பு..!

ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை ரூ.10ஆக குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக, மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, நடைமேடை டிக்கெட்டின் விலை குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரூ.50ஆக இருந்த பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் மீண்டும் ரூ.10ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்