இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம்..!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், "தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகு கவிழ்ப்பு என இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இலங்கை கடற்படை தாக்குதலில் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ராஜ்கிரணை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும், சேதமடைந்த படகுக்கு இழப்பீடும்  வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களின் படகை  இலங்கை கடற்படை கப்பல் மோதி கவிழ்த்துள்ளது. அதில் மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கி விட்டனர்; அவர்களில் ஒருவர் மாயமாகி விட்டார்" என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்